Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 மே 20 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்திருந்த, சுமார் 2,000 ஊழியர்களை பணியமர்த்திய நெக்ஸ்ட் ஆடை உற்பத்தி தொழிற்சாலை , செவ்வாய்க்கிழமை (20) முதல் திடீரென காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
1978 ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த தொழிற்சாலை, இங்கிலாந்தில் ஒரு முதலீட்டுத் திட்டமாகும், மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அதன் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் தற்போதைய உற்பத்தி செலவுகள் நிலையானதாக இல்லாததால் இந்த தொழிற்சாலையை மூட தீர்மானிக்கப்பட்டது என நிர்வாகத்தால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில், குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது குறித்த தொழிற்சாலை பூட்டப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே உள்ளதாகவும் தொழிற்சாலையில் பொறுப்பான அதிகாரிகள் யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டி.கே.ஜி. கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago