Editorial / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

காலியில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடையில் சிவப்பு மையைத் தெளித்த குற்றச்சாட்டின் கீழ் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடையவர் எனவும், அவர் கொழும்பின் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே காலியில் உள்ள குறித்த சர்வதேச பாடசாலையில் ஆசிரியராகப் பணியில் இணைந்துள்ளார்.
காலி, 'சரவந்துகடை' சந்தி பகுதியில் பொது இடங்களில் வைத்து பல மாணவிகளின் சீருடைகளின் பின்புறமாக இவர் திட்டமிட்டுச் சிவப்பு மையைத் தெளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கமெராவில் பதிவாகியிருந்தது. இக்காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.
காலி பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரான ஆசிரியர், காலி பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
52 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago