2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு பீர் விற்றவர் கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் கல்விப்பயிலும் மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிளில் பீர் விற்பனை செய்த ஒருவரை மொனராகலை பொலிஸார் கடந்த 25 ஆம் திகதி கைது செய்தனர்.

 மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கும்புக்கனை பகுதியில் வைத்து  ஒருவரை மொனராகலை பொலிஸார்   கைது செய்தனர். சந்தேக நபர் கும்புக்கனை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர்.

வகுப்புகளின் இடைவேளையின் போது அவர் பீர் விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

மாணவர்களுக்கு பீர் போத்தல்கள் வழங்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மூன்று பீர் போத்தல்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கும்புக்கனை பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரிடமிருந்து பீர் வாங்கச் சென்றபோது, ​​பொலிஸார் ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சந்தேக நபர், வழக்குப் பொருட்களும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .