Janu / 2025 ஜூன் 02 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணை, ரெமுன பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் பணியாற்றும் இரு தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்குருவத்தொட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டிய, செவனகல, லக்ஷிரிகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய எச்.ஏ. விமலசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொழிலாளர்கள் இருவரும் இடைவேளை அறையில் இருந்த போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி சந்தேக நபர் மண்வெட்டியால் மற்றையவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக, மொரன்ன, வரகா வெஹெரவைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் மண்வெட்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026