Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 29 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிதிகம சஹான் என்றழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலம் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர், இந்தியாவில் இருந்து திரும்பும் போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டார்.
வெலிகமவைச் சேர்ந்த 32 வயதான சந்தேக நபர், மாத்தறை மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுகளில் பல கொலைகள் மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
அவர் தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவர் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் கூட்டாளி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மிதிகம சுட்டியுடனும் நெருங்கிய தொடர்புடையவராவார். மாலை 6:30 மணியளவில் சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1173 இல் சஹான் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
முன்கூட்டிய உளவுத்துறையின்படி செயல்பட்ட CID அதிகாரிகள், வருகை முனையத்தில் அவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
10 minute ago
57 minute ago
1 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
57 minute ago
1 hours ago
29 Jul 2025