Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 30 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து செவ்வாய்க்கிழமை(29)கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஐடி யினர் மாலை 4.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் ; இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து மாலை 4.00 மணியளவில் சிஐடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஐடி யினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சிஐடி யினர் தொடர்ச்சியாக கைதுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago