Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிந்திவெல பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த 79 வயதுடைய மூதாட்டியை வன்புணர்ந்து, கழுத்தை நெரித்து கொலை செய்த பின், அவரது காதுகளை அறுத்து தங்க தோடுகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 67 வயதுடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 38 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை (26) அன்று குறித்த சந்தேக நபர் கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தி மற்றும் சம்பவத்தின் போது சந்தேக நபர் அணிந்திருந்த ஆடைகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கிரிந்திவெல - கிரிமெட்டியவத்த பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டன.
கடந்த 18ஆம் திகதி கிரிந்திவெல, ஹிஸ்வெல்ல பகுதியில் வசித்து வந்த ஆர்.டி. திலகா மாலினி ஜயரத்ன எனும் வயது முதிர்ந்த பெண்ணே இவ்வாறு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago