R.Maheshwary / 2021 மே 06 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் அல்லது தரித்து நிற்கும் சகல விமானங்களிடமிருந்தும் எவ்வாறான கட்டணங்களையும் இரண்டு வருடங்களுக்கு அறவிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதனால், மத்தல விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விமான நிலையத்துக்கு விமானங்களை வரவழைப்பது குறித்து லயன் ஏயார், உக்ரேன் எயார் லைன், இன்டிகோ, எயார் இந்தியா, எயார் விஸ்தாரா, சலாம் எயார், எமிரேட்ஸ், மோல்டிவியன் எயார் ஆகிய விமானச் சேவைகள் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதென்றும் இதன் பலனாக 8 வௌிநாட்டு விமான நிறுவனங்கள் மத்தல விமான நிலையத்துக்கு விமானங்களை அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
16 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago