Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 27 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயில் மகிமை மிக்க மாதா சொரூபத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் தகவல் தருகையில் ,
மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயில் மாதா சொரூபத்தை மதுபோதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் துரித நடவடிக்கையால் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் ஏனையோர் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவித்தனர். அத்துடன் விசாரணைகளை அடுத்து குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் - தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய குழுவினர் வெள்ளிக்கிழமை (25) குறித்த ஆலயத்தின் பகுதியில் இருந்து மது அருந்தியதாகவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுற்றுலாவுக்காக வருகை தந்த சுற்றுலா பயணிகளுடன் தகாத வார்த்தைகளால் நக்கல் கதைகள் கூறி முரண்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் கடும் மது போதையில் இருந்த குறித்த குழுவினர் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 லட்சம் பெறுமதியான மாதா சொரூபத்தை அடித்து முழுமையாக உடைத்து சேதமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ஆலய நிர்வாகத்தினர் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்து சமயத்தை சேர்ந்த தரப்பினர் உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பொலிஸார் நிலைமையை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையில் ஈடுபட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago