2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பொரளை விபத்தில் சாரதி கஞ்சா பயன்படுத்தியமை உறுதி

Freelancer   / 2025 ஜூலை 28 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை கனத்த சந்தியில் இன்று (28) காலை நடந்த கோர விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் இருவர் பெண்கள், ஐவர் ஆண்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். 

ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் வாகனம், கனத்த சந்தியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களுடன் மோதியது. 

இதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

உயிரிழந்தவர் அதுருகிரியவைச் சேர்ந்த 62 வயது நபராவார். 

விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதி, வைத்தியப் பரிசோதனையில் கஞ்சா பாவித்திருந்தது உறுதியாகியுள்ளது. 

கிரேன் வாகனத்தின் தடுப்பான் செயலிழந்ததும், சாரதியின் அதிவேக ஓட்டுதலும் விபத்துக்கு முக்கிய காரணங்களாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .