2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மதுபானசாலைகளுக்கு புதிய வழிகாட்டல்கள்

R.Maheshwary   / 2021 மே 06 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக,கலால் திணைக்கள ஆணையாளரால் நாடுபூராகவுமுள்ள   உரிமங்கள்  பெற்ற சகல மதுபானசாலைகளுக்கும்  விசேட சுகாதார வழிகாட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்கள் உடன்அமுலுக்கு வரும் வகையிலும்  சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு இணைவாகவும்  கடைபிடிக்க  வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, உரிமங்கள்  பெற்ற  சகல மதுபான நிலையங்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல விடயங்கள் இந்த வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .