Shanmugan Murugavel / 2026 ஜனவரி 26 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதற் தடவையாக ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 5,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் 2025-இல் 60 சதவீதம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
நிச்சயமில்லாத காலங்களில் முதலீட்டாளர்களால் வாங்கப்படக்கூடிய பாதுகாப்பான சொத்தாக தங்கம் காணப்படுகின்றது.
இதேவேளை ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையானது வெள்ளிக்கிழமை (23) முதற்தடவையாக 100 ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் தொட்டுள்ளது. இது கடந்தாண்டிலிருந்து 150 சதவீத அதிகரிப்பாகும்.
வழமையை விட அதிகமான பணவீக்கம், நலிவான ஐக்கிய அமெரிக்க டொலர், உலகெங்கிலுமுள்ள மத்திய வங்கிகளால் தங்கம் வாங்கப்படுகின்றமை, இவ்வாண்டு மீண்டும் வட்டி வீதங்களை ஐக்கிய அமெரிக்க மத்திய வங்கி குறைக்கவுள்ளமை உள்ளிட்ட காரணங்களாலும் காஸா, உக்ரேனில் யுத்தத்தாலும், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை ஐ. அமெரிக்கா கைப்பற்றியதாலும் இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
9 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
3 hours ago
9 hours ago