Editorial / 2026 ஜனவரி 11 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ டிரைவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரை பொலிஸார் சுட்டு பிடித்தனர்.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரைச் சேர்ந்தவர் அனிதா சவுத்திரி(40). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆட்டோ ரிக் ஷா ஓட்டி வந்தார். இவர் முகேஷ் ஜா என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
பின்னர் முகேஷ் ஜாவை விட்டு அனிதா சவுத்திரி பிரிந்து வேறு ஒரு நபரை திருமணம் செய்தார். அனிதா சவுத்திரிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரவு நேரத்தில் அவர் ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தினருக்கு உதவி வந்தார். ரயில்வே நிலையத்திலிருந்து பயணிகளை அழைத்து செல்வதை அவர் வழக்கமாக மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ரயில் நிலையம் அருகே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை முன்னாள் கணவர் முகேஷ் ஜா கொலை செய்திருக்கலாம் என அனிதாவின் கணவர் மற்றும் அனிதாவின் சகோதரி வினிதா ஆகி யோர் பொலிஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
அவரை நிறுத்த முயன்றபோது, முகேஷ் ஜா, பொலிஸார் மீது தனது கைத்துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் முகேஷ் ஜாவின் காலில் குண்டு பாய்ந்தது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் பொலிஸார் சேர்த்துள்ளனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். ‘‘அனிதா சவுத்திரி தன்னைவிட்டு பிரிந்து சென்றதை தாங்கி கொள்ள முடியவில்லை. என்னை அவர் ஏமாற்றியதால், அனிதாவை சுட்டுக் கொன்றேன்’’ என பொலிஸாரிடம் முகேஷ் ஜா கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .