Freelancer / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்தது.
அதற்காகத் தேவையான டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறை, புதிய சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக வினைத்திறனை மேம்படுத்தல், மனித வள அபிவிருத்தி மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. R
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago