2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘மதுஷைக் கைதுசெய்ய அரசாங்கம் ஒரு தடவையேனும் டுபாய் செல்லவில்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய 7 தடவைகள் டுபாய் சென்ற இலங்கை அரசாங்கம், மாக்கந்துர மதுஷை கைதுசெய்ய ஒரு தடவையேனும் டுபாய்க்கு செல்லவில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி சமயங் என்ற பாதாள குழுவின் தலைவர், பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகி​யோர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட பின்னர் மதுஷை கைதுசெய்வதற்கு சிவப்பு அறிவித்தலை விடுப்பதற்கனான வாய்ப்புகள் இருந்தப் போதும் எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எனினும் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தின் பின்னர், அரசாங்கம் செயற்பட்ட விதத்தைப் போலவே, அதற்கு பின்னரான நடவடிக்ககைகளிலும் அரசாங்கம் செயற்பட்டுள்ளது என்று நாமல் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் மதுஷைக் கைதுசெய்வது தொடர்பில், உண்மைத் தகவல்களை மறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .