2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுஷை நாடுகடத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதுஷை, இலங்கைக்கு நாடுகடத்துவது தொடர்பில்,  தற்போது விசேட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயின் பிரபல நாளிதலொன்று இன்று (06) வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், மதுஷை இலங்கைக்கு நாடுகடத்த முடியுமா என்பது தொடர்பில், அந்நாட்டு அதிகாரிகள் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுஷ் உள்ளிட்ட அவரது சகாக்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், பாதாள உலகக் கோஷ்டிடியின் தலைவரான மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்‌ஷித்த உள்ளிட்ட 25 பேர், டுபாயில் அந்நாட்டுப் பொலிஸாரால் நேற்று (05) கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டோரில் ஒருவரிடம், இராஜதந்திர கடவுச்சீட்டு இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .