2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? அமைச்சராகும் அண்ணாமலை

Editorial   / 2025 ஜூலை 03 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ( பாஜக) முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக தேசிய தலைவர்களை கட்சி தலைமை மாற்றம் செய்து வரும் நிலையில், அமைச்சரவையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து, சில அமைச்சர்களுக்கு தேர்தல் ரீதியான பொறுப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி ஆகியோர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .