Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியின் இரகசியங்கள் வெளியே கசிவதுடன் சம்பந்தப்பட்டவர்களை இனங்காணுமுகமாக, மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் இரகசியங்கள் வௌிக்கசிவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அத்தகவல்கள் மேலும் உறுதிப்படுத்தின.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள நிதி நகரங்களில் முதலிடத் தயாராகவுள்ள முதலீட்டாளர்கள், மத்திய வங்கியின் இரகசியக் கசிவு தொடர்பில் வௌிப்படுத்திய ஆதங்கத்தைத் தொடர்ந்தே, பிரதமரின் கவனத்துக்கு மேற்படி விடயம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய பிரேஸில் விஜயத்தை முடித்து நாடு திரும்பியதும், நிதி ஆணைக்குழுவுடன் கலந்தாலேசித்து, தீர்க்கமான முடிவெடுக்கவுள்ளதாகவும், நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
51 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago