Editorial / 2019 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த மாதத்தில் நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய சமய நிகழ்வுகளை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட கல்பிட்டி தலவில் புனித அன்னமாள் ஆலயத்தின் வருடாந்த ஆடி மாதத் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் கண்டி எசல பெரேஹரா மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின வருடாந்த தேர்த திருவிழா என்பன இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது என,இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரகம் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்துள்ள இரண்டாம் நிலை எச்சரிக்கை குறித்து, கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
“மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை எமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. அவ்வாறான தகவல்கள் கிடைத்தால், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படாத வகையில், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார்.
முன்னதாக, இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago