Freelancer / 2026 மார்ச் 15 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மாதத்துக்குள் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள கில்லி சஹலான் பகுதியில் நடைபெற்ற மாற்றத்துக்கான பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார்.
இதன்போது, பஞ்சாபின் இந்து மற்றும் சீக்கிய வாக்காளர்களின் ஆதரவை திரட்டும் விதமாக, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என அமித் ஷா உறுதி அளித்தார்.
நமது சீக்கிய குருமார்கள் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், இத்தகைய மதமாற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைத் தங்களின் வாக்கு வங்கியாகக் கருதுகின்றன. 2027 தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை அளியுங்கள். நாங்கள் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்றும் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். (a)
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago