Freelancer / 2026 மே 09 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குரிய மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, திருத்தப்பட்ட மின் உற்பத்திச் செலவு மதிப்பீட்டை 'நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்' நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் சமர்ப்பித்திருந்தது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையே, இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வாய்மூலக் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பமும் அண்மையில் நிறைவடைந்தது.
எவ்வாறாயினும், தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. R
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago