Janu / 2026 ஜனவரி 11 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
குச்சவெளி மற்றும் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுகளில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கிய தனது ஆட்டை காப்பாற்ற முயன்ற போது சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலகொலவேவ பகுதியிலும் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வன விலங்குகளிடமிருந்து தனது பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின் கம்பியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 Jan 2026
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Jan 2026
11 Jan 2026