Editorial / 2026 மே 06 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான குமார ஜயகொடிக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை, எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல தீர்மானித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு மற்றும் இறக்குமதி பிரிவின் மேலாளராகப் பணியாற்றியபோது, அரசாங்கத்திற்கு 8.8 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஜயகொடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கிற்கு முன்னைய மாநாட்டின் (Pre-trial conference) முடிவைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைகள் ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என நீதிபதி கொடவெல அறிவித்தார். அத்துடன், அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு அரச தரப்பு சாட்சிகளுக்கு அழைப்பாணை (Summons) விடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago