2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன்னாள் கட்டுப்பாட்டு ஆணையாளர் ஹர்ஷாவுக்கு சிறை

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய விசா ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம்  இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, செவ்வாய்க்கிழமை (23)  விதித்தது.

நீதியரசர்களான யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

2024 செப்டம்பர் 25, அன்று, சர்ச்சைக்குரிய விசா ஒப்பந்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக ஹர்ஷா இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .