Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 18 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று பெண்களின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இத்தேபனையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் குறித்து எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணையில் அடிப்படையில், யகிரல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் அலைபேசி என்பனவற்றை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .