Freelancer / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வங்காலை கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற வங்காலை மீனவர் ஒருவரின் படகு ஒன்றுடன் நேற்று முன் தினம் (08) மாலை கடற்படையினரின் டோறாப்படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான படகையும் மீனவர்கள் இருவரையும் கைவிட்டு கடற்படை படகு பொறுப்பின்றிச் சென்றதால் கடலில் விழுந்த இரு மீனவர்களும் உயிருக்குப் போராடியுள்ளனர்.
தங்கள் உயிரைக் காக்கும் பொருட்டு நீச்சல் மூலம் மற்றுமொரு மீனவர் படகைச் சென்றடைந்த அவர்கள் காப்பாற்றப்பட்டு கரையை வந்தடைந்துள்ளனர்.
கடற்படையின் டோறா மோதியதில் மீனவரின் படகும் இயந்திரமும் பாவிக்கமுடியாத நிலையில் நொருங்குண்டு காணப்படுகின்றது.
இரு மீனவர்களையும், அவர்களது படகுடன் சக மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர். (a)

24 minute ago
31 minute ago
46 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
46 minute ago
49 minute ago