Janu / 2026 மார்ச் 02 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில, கட்டுநேரிய - பான்கட வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு மோதலாக மாறியதில், கணவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் மனைவி கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான, கட்டுநேரிய, பான்கட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய அதிகாரி முதியன்சேலாகே துஷாரி அதிகாரி என்ற இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருடைய இரண்டு மகள்களும் திருமணமாகி தனியாக வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று இரவு வீட்டின் படுக்கையறையில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
46 minute ago
49 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
49 minute ago
58 minute ago
2 hours ago