Freelancer / 2026 மே 15 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச சேவையைச் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 6ஆவது கூட்டம் இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் மீது மேலதிக சுமை விழாதவாறு, வலுசக்தி தொடர்பான செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்று ஒரு நிலையான முகாமைத்துவச் செயன்முறையை முன்னெடுத்துள்ளது.
எதிர்வரும் வெசாக் வாரத்தில் மக்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் இதன் போது குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் காரணமாகவே பாரிய மின்சார நெருக்கடியைத் தவிர்க்க முடிந்ததாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். R
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago