2025 ஜூலை 05, சனிக்கிழமை

மரண தண்டனை அமுல்: உறுதியை மீளப் பெறுமாறு வலியுறுத்து

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை, கைவிடுமாறு, சர்வதேச நீதிபதிகள் ஆணையகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளது.

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை, இலங்கை மீறுவதாக அமையும் என்று, ஆணையகம் சுட்டிக்காட்டியு்ளளதோடு, ஜனாதிபதியின் இச்செயற்பாடு, நாட்டின் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

எந்த சூழ்நிலையிலும், மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் இதை, வாழ்வுரிமை மீறலாகவும் மனிதாபிமானமற்ற சீரழிவாகக் கருதுவதாகவும் ஆணையகத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஃப்றெட்றிக் றவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை விதிப்பது உறுதி என, கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .