2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மரண வீட்டில் பெண்ணுக்காக சண்டை

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண வீட்டில் ஒன்றில் பெண் ஒருவரைப் பற்றி ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆண்ணொருவரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

எகொட உயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .