2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

Thipaan   / 2015 நவம்பர் 24 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்லைன் வீதியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை(24) மாலை பாரிய மரமொன்று விழுந்தமையால், மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்தில், களனியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

எனினும், அவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்துவந்த அவருடைய மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

கடும் மழைகாரணமாகவே மரம் விழுந்துள்ளதாகவும் இதனால் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .