Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைதுசெய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும் அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள், குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைதுசெய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை கூடிய போதே, இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த பிணை மோசடி ஊடாக, இலாபத்தைப் பெற்றுக்கொண்ட இன்னும் பல நிறுவனங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியானதுடன், அந்த நிறுவனங்கள் தொடர்பிலும், உடனடியாக குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த பரிந்துரைகள் தொடர்பில் இறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்கு அக்குழு, எதிர்வரும் 27ஆம் திகதி, மீண்டும் கூடவிருக்கிறது.
26 பேரங்கிய கோப் குழுவின் நேற்றைய கூட்டத்தின் போது, 11 பேர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.
நேற்றைய கூட்டம் தொடர்பில், பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில், இறுதி அறிக்கையை ஆராய்ந்து பார்ப்பதற்காக, கோப் குழு, கடந்த வாரத்தில் கூடியது. அதேபோல், இன்றும் (நேற்று) காலை 10 மணிக்கு, அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கூடியது.
இந்தக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசிறி கஜதீர ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கு மேலதிகமாகக் கணக்காய்வாளர் மற்றும் கோப் குழுவின் செயலாளர் சபை அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, பல்வேறு விடயங்கள் தொடர்பான கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. அதிலிருந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. அதன் பின்னர், இந்த அறிக்கையின் இறுதிப் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்வது, 6.30க்கு ஆரம்பமானது. இந்தச் சந்தர்ப்பத்தில், பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தினால், மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கலின் போது, அந்நிறுவனம் முறைகேடான முறையில் இலாபத்தை ஈட்டியுள்ளது.
ஆகையால், அரசாங்கத்துக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்பது, கோப் குழுவின் முன்வைக்கப்பட்ட சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.
அதனடிப்படையிலேயே, இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைது செய்து, அவர்களுக்கெதிராக குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கோப் குழு பரிந்துரைத்தது” என்றார்.
சர்ச்சைக்குரிய பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், மத்திய வங்கியுடனான பிணை முறிக் கொடுக்கல் வாங்கல்களைத் தொடர்ந்து, அதீத இலாபத்தை ஈட்டியதாக, அந்நிறுவனத்தின் நிதியறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிந்தது. இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், அந்நிறுவனம் 5.1 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது, அதற்கு முன்னைய நிதியாண்டில் அந்நிறுவனம் ஈட்டிய இலாபமான 959 மில்லியன் ரூபாயை விட, 430 சதவீதம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை கூடிய போதே, இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த பிணை மோசடி ஊடாக, இலாபத்தைப் பெற்றுக்கொண்ட இன்னும் பல நிறுவனங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியானதுடன், அந்த நிறுவனங்கள் தொடர்பிலும், உடனடியாக குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த பரிந்துரைகள் தொடர்பில் இறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்கு அக்குழு, எதிர்வரும் 27ஆம் திகதி, மீண்டும் கூடவிருக்கிறது. 26 பேரடங்கிய கோப் குழுவின் நேற்றைய கூட்டத்தின் போது, 11 பேர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.
நேற்றைய கூட்டம் தொடர்பில், பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில், இறுதி அறிக்கையை ஆராய்ந்து பார்ப்பதற்காக, கோப் குழு, கடந்த வாரத்தில் கூடியது. அதேபோல், இன்றும் (நேற்று) காலை 10 மணிக்கு, அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கூடியது.
இந்தக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசிறி கஜதீர ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கு மேலதிகமாக, கணக்காய்வாளர் நாயகம் மற்றும் கோப் குழுவின் செயலாளர் சபை அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, இந்த அறிக்கையின் இறுதிப் பரிந்துரைகளைப் பரிசீலனை செய்வது, மாலை 6.30க்கு ஆரம்பமானது.
இந்தச் சந்தர்ப்பத்தில், பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தினால், மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கலின் போது, அந்நிறுவனம் முறைகேடான முறையில் இலாபத்தை ஈட்டியுள்ளது. ஆகையால், அரசாங்கத்துக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஐ.தே.க உறுப்பினர்கள், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்பது, கோப் குழுவின் முன்வைக்கப்பட்ட சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.
அதனடிப்படையிலேயே, இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைது செய்து, அவர்களுக்கெதிராக குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கோப் குழு பரிந்துரைத்தது” என்றார்.
சர்ச்சைக்குரிய பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், மத்திய வங்கியுடனான பிணை முறிக் கொடுக்கல் வாங்கல்களைத் தொடர்ந்து, அதீத இலாபத்தை ஈட்டியதாக, அந்நிறுவனத்தின் நிதியறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிந்தது. இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், அந்நிறுவனம் 5.1 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது, அதற்கு முன்னைய நிதியாண்டில் அந்நிறுவனம் ஈட்டிய இலாபமான 959 மில்லியன் ரூபாயை விட, 430 சதவீதம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
9 hours ago