Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை நேற்று (27) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், மூன்று நாட்களாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரை பகுதியில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான வெடிபொருட்களும் தங்கம் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களும் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கருதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையிலும் தொல்பொருள் திணைக்களம், கிராம சேவையாளர், பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், பிரதேச செயலக அதிகாரிகளின் முன்னிலையிலும் தொடர்ச்சியாக அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் நேற்று எந்த வித தடயப் பொருட்களும் கிடைக்கவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago