2025 மே 09, வெள்ளிக்கிழமை

முழு மீட்சி உறுதி செய்யப்படவில்லை : IMF

Simrith   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழு இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டதுடன் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருக்கின்ற போதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அது தெரிவித்துள்ளது.

Peter Breuer மற்றும் Ms. Katsiaryna Svirydzenka தலைமையிலான குழு, கடினமான ஆனால் மிகவும் அவசியமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றது.

“இலங்கை மக்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். கடினமான ஆனால் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 

பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளை இந்த முயற்சிகள் காட்டுகின்றன.  2022 செப்டம்பர் இல் 70 சதவீதம் எனும் உச்ச நிலையிலிருந்த பணவீக்கம் 2023 செப்டம்பரில் 2 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச்-ஜூன் காலத்தில் மொத்த சர்வதேச கையிருப்பு $1.5 பில்லியன் அதிகரித்துள்ளது, மேலும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் குறைந்துள்ளது. 

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை கலவையான சமிக்ஞைகளை வழங்குவதன் மூலம் வளர்ச்சி வேகம் குறைவாகவே உள்ளது  எனக் குறித்த குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X