2021 ஜூன் 16, புதன்கிழமை

மஸ்கெலியாவில் மண்சரிவு

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, நல்லதண்ணி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று (07) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

மோகினி நீர்வீழ்ச்சியின் அருகில் ஏற்பட்டுள்ள மண் திட்டு சரிவில் கற்பாறைகள் காணப்படுவதால் நல்லத்தண்ணி - மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் மறே - மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணி நகரில் இருந்து செல்லும் பயணிகள் மற்றும் மஸ்கெலியா நகரில் இருந்து செல்லும் பயணிகளின் போக்குவரத்து லக்சபான வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .