2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மஹிந்தவை சந்தித்து நலம் விசாரித்த எதிர்க்கட்சியினர்

Simrith   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் திலீப் வெதஆராச்சி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்தித்துள்ளனர். 

மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசிக்கும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் நலம் குறித்து விசாரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் திலிப் வெதஆராச்சி ஆகியோர் அவரைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹேஷா விதானகே முன்னர் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆரச்சி பாராளுமன்றத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .