Editorial / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மஹிந்தவுடனான சந்திப்புக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையெனத் தெரிவித்த ஈரோஸ் அமைப்பின் தலைவர் அருளர், அது, ஈரோஸ் அமைப்பின் தலைவர்கள் என கூறிக்கொள்ளும் சிலருடைய செயற்பாடே எனவும் கூறினார்.
அண்மையில், ஈரோஸ் அமைப்பின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து பேசியமை தொடர்பாக யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் பேதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஈரோஸ் அமைப்பின் பெயரில் சிலர் சந்திப்புகளை நடத்தியிருப்பதாகவும் ஆனால், அதற்கும் ஈரோஸ் அமைப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையெனவும், அவர் கூறினார்.
அது ஈரோஸ் அமைப்பின் நிலைப்பாடும் அல்லவெனத் தெரிவித்த அவர், தமது அமைப்புக்கு புதிதாக நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு கட்டமைப்புடன் தமது கட்சி இருந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களும், கட்சியின் தலைவர்கள் தாமே என கூறிக்கொள்ளும் சிலரும் கட்சியின் பெயரை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை நடத்தியுள்ளதுடன், தமது கட்சிக்கு எதிராக வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்து கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்கியிருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்புகளை நடத்துவதும், அவருடன் இணங்கி செயற்படுவதும் தமது நிலைப்பாடல்ல என்பதுடன் அந்த சந்திப்புக்கும் தமது அமைப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லையெனவும், அவர் மேலும் கூறினார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago