2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மஹிந்த தொடர்ந்து பதவி வகித்தால் ஜனநாயக விரோதியாக கருத வேண்டும்

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவி வகித்த முடியாது எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சபை அமர்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபித்திருக்க வேண்டும். அது ஜனநாயக கடமை. அந்த கடமையை நிறைவேற்ற அவர் தவறினார்.

நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியாவது அவர் பெரும்பான்மையை நிருபித்திருக்கலாம் அதனையும் அவர் செய்யவில்லை.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதுடன், அமைச்சரவை புதிதாக பலர் நியமிக்கப்பட்டனர். சிலர் எம்.பிக்கள் விலை போனார்கள். இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டும் மைந்தவால் 113 உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் போனது.

இவ்வாறான செயற்பாடுளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பிரதமர் மற்றும் அவர் தாலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, குரல் வாக்கெடுப்பின் மூலமாக (ஆம்/இல்லை) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 128 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் ஆற்றிய உரைக்கு எதிராகவும், அவருக்கு எதிராகவும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது,சபாநாயகரை சபைக்கு வரவிடாது அவரது கதிரை மற்றும் அதனைச் சுற்றி மஹிந்த அணியினர் கூடி குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது தாமதமாக பாதுகாப்புடன் வந்து தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

மஹிந்த மீதும், அவர் தலைமையிலான அரசாங்கம் மீதும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தீர்மானத்துக்கமைய மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இராஜிநாமா செய்ய வேண்டும். பதவி வகிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

அத்துடன், அமைச்சுகளில் அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களும் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும். அவர்கள் அவ்வாறு பதவி வகிப்பது தவறு.

தொடர்ந்தும் பதவி வகித்தால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாக கருதப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவர் பிரதமராகவோ அரசாங்கத்தை ஆளவோ முடியாது. இது சட்டத்துக்கும்,ஜனநாயகத்துக்கும் விரோதமான செயற்பாடாகும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .