Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தச் சபையில் புதிய வைத்தியர் ஒருவர் இருக்கின்றார் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அவர்தான், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவரை, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி) அழைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
தாஜுதீனின் சடலத்தையெடுத்து தாங்கள் அரசியல் செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், தாஜுதீனின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, அதனூடாக அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
றகர் வீரர் வசீம் தாஜுதீன் விபத்தொன்றிலேயே மரணித்தார் என்பது போன்ற பிரசாரத்தை மஹிந்த ராஜபக்ஷ, முன்னெடுத்துள்ளார். அதுவும், கொழும்பு-5, பார்க் வீதியில், ஒரு மணிநேரத்துக்கு 175 கிலோமீற்றர் வேகத்திலேயே அவர், தன்னுடைய வாகனத்தை ஓட்டிச்சென்று, மதிலிலேயே மோதிக்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். “நைட் ரைடரினால் மட்டுமே அந்த வேகத்தில் வாகனத்தைச் செலுத்தமுடியும். எனினும், பார்க் வீதியில் அவ்வாறு செய்யமுடியாது என்றார்.
அதுமட்டுமன்றி, 22 வினாடிகளுக்கு முன்னர், தண்ணீர் போத்தலை கொள்வனவு செய்துள்ள றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், தன்னுடைய மணிபேர்ஸ், அலைபேசியை 5 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் வீசிவிட்டு, மணித்தியாலத்துக்கு 175 கிலோமீற்றர் வேகத்தில் தன்னுடைய காரைச் செலுத்திச் சென்று மோதிக்கொண்டுள்ளார் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றது. இவ்வாறான நிலையில், மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்ற கட்டளையை மீறியுள்ளார் எனத் தெரிவித்த அவர், அழைத்து சி.ஐ.டி விசாரணைக்க வேண்டுமென்றார்.
தானே ஓட்டிச் சென்ற காரை, மதிலில் மோதி தன்னுயிரை அவர் மாய்த்துக்கொண்டார் எனின், அவருடைய சடலம், காரின் பின்னிருக்கையில் இருந்தது எவ்வாறெனக் கேள்வியெழுப்பிய ரஞ்சித் ராமநாயக்க, தாஜுதீனின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள், உடலுறுப்புகள் பல காணாமல் போயுள்ளனவென அறிக்கையிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, இது ஒரு படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர்.
அப்படியாயின், இந்த நாடாளுமன்றத்துக்குள் புதிய வைத்தியர் ஒருவர் இருக்கிறார். அவர்தான், மஹிந்த ராஜபக்ஷ எனத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, தாஜுதீனின் சடலத்தை மரண பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்களை விடவும் சிறந்த வைத்தியர் போலவே கருத்துரைத்துள்ளார். அதுவும் இதில், தங்கள் குடும்பத்தை சிக்கவைக்கும் திட்டமெனத் தெரிவித்துள்ளார் என்றும் ரஞ்சன் குறிப்பிட்டார்.
13 minute ago
24 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
28 minute ago
33 minute ago