2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவிடம் மன்றாடிய சு.கவினர்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

இரண்டு முறை இந்த நாட்டின் தலைவராகப் பதவியேற்பதற்குக் காரணமாக இருந்த கட்சிக்குத் துரோகமிழைக்க வேண்டாம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கோரிக்கை விடுத்துள்ளார்.  

சு.க.வின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற போதே, இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  

இதன்போது உரையாடிய நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, “ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாகப் பிரியும் அளவுக்கான எந்தவொரு முடிவையும், முன்னாள் ஜனாதிபதி எடுப்பது நியாயமற்றதாகும். முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சு.கவுக்குத் தலைமைத் தாங்குகின்றார். இது, சு.க.வின் மத்தியக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். எனவே, இதற்கு எதிராகச் செயற்படுவதை, ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.  

இதன்போது உரையாற்றிய அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “கடந்த 1970ஆம் ஆண்டிலிருந்து, அவருடைய அரசியல் பயணத்துக்கு ஒரு ஏணியாக இருந்து வரும் கட்சியை, உதைத்துத் தள்ளக்கூடாது. ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி எண்ணினால், ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிப் பெறும் என்பதில், எந்தவொரு சந்தேகமும் இல்லை” என்றார்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X