Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்டை வீட்டுத் தோட்டத்திலிருந்த மாங்காய் மரத்திலிருந்து 19 மாங்காய்களைத் திருடி, அவற்றைத் தம்வசம் வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர், தன்மீதான குற்றச்சாட்டை திறந்த நீதிமன்றத்தில் வைத்து ஒத்துக்கொண்டார்.
சந்தேகநபரான வயோதிபப் பெண்ணுக்கான தண்டனையை அறிவிப்பதற்காக, வழக்கை, எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்த அநுராதபுரம் பிரதான நீதவான் ஜானக சமரதுங்க, அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வயோதிபப் பெண்ணுக்குக் கட்டளையிட்டார்.
அநுராதபுரம், சாலியபுர ஜயந்தி கிராமத்தைச் சேர்ந்த லலிதா ஆனந்த என்ற பெண்ணே, தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டார். தன்னுடைய வீட்டுத்தோட்டத்திலிருந்து 19 மாங்காய்களை, மேற்படி வயோதிபப் பெண் திருடிவிட்டாரென, அண்டைவீட்டுப் பெண், அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
சந்தேகநபரான மேற்படி வயோதிபப் பெண், இதற்கு முன்னரும், மாங்காய்களைத் திருடிய குற்றச்சாட்டுகளுக்காக, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
13 minute ago