Editorial / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று சனிக்கிழமை (04) அடையாளம் காணப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளது
குறித்த காணியில் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது
சனிக்கிழமை (04) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் அதனை அவதானித்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிஸார் குறித்த பகுதியில் இருந்த மனித உடலின் எச்சங்கள் பொருட்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி திருமதி நேரோஜினி ஆர்த்தனன் குறித்த எலும்புக்கூட்டு தொகுதியை பார்வையிட்ட பின்னர் பதில் நீதிபதி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த எலும்புக்கூடு பாகங்கள் மற்றும் தடய பொருட்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த காணியில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் சிறு தொகை பணம் நஞ்சு மருந்து கான் ஆடைகள் என்பன குறித்த இடத்தில் காணப்பட்டதோடு
பல நாட்களான நிலையில் மனித உடற்பகுதிகள் நாய்கள் மற்றும் இதர விலங்குகளால் சிதறடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது
இந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago