Editorial / 2026 மார்ச் 15 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
பொத்துவில், பானமை - சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சனிக்கிழமை (14) முன்னெடுத்த விசேட சோதனையின் போதே இவர்கள் பிடிபட்டனர்.
வெள்ளை நிறக் கார் ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட சுமார் 70 கிலோ கிராம் எடையுள்ள காட்டெருமை மற்றும் மான் இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன்போது இறைச்சியை எடைபோடப் பயன்படுத்திய தராசு ஒன்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர்கள் படகுகள் மூலம் நீர்நிலைகளைக் கடந்து சென்று, வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சனிக்கிழமை (14) அன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 2026.03.24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளான பி.எம்.ஜி.சி. பண்டார, டி.எம்.டி.எல். திஸாநாயக்க, உதவி அதிகாரி விக்கிரமரத்ன, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் கே. ஹனோஜன், கள உதவியாளர் ஆர்.எம். லக்ஷ்மன், சாரதிகளான அத்தநாயக்க மற்றும் ரசிக ஆகியோருடன் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago