Editorial / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம்தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்றுவந்தவர் எனவும் தெரியவருகிறது.
மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago