2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் ஊடரங்கு சட்டம் அமுலில்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 4.30 மணிமுதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (19) காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டது.

புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்டபிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

புத்தளம் பிராந்தியத்தின் புத்தளம், ஆனமடுவ, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தல், நவகத்தேகம, பல்லம, வண்ணாத்திவில்லு, உடப்பு, நுரைச்சோலை மற்றும் சாலியவெவ பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபம் பொலிஸ் பிரிவின் சிலாபம், தங்கொட்டுவ, கொஸ்வத்த, மாதம்பை, மாரவில, வென்னப்புவ மற்றும் ஆராச்சிகட்டு ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .