2026 மே 02, சனிக்கிழமை

’மீண்டும் வருவது மக்கள் கைகளில்’

R.Maheshwary   / 2021 மார்ச் 22 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

   இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை, மக்களே எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எவ்வாறாயினும் அது தொடர்பில் தீர்மானிக்க முன்னர், தற்போது நாட்டை நிர்வகிக்கக் கிடைத்துள்ள காலத்தில் செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கின்றன என்றார்.

நுவரெலியா - வலப்பனை பிரதேசத்தில், நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற கிராமத்துடனான வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “60 மாதக் காலப்பகுதிக்கே, மக்கள் என்னை ஜனாதிபதியாக்கி உள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஜனாதிபதியாவது தொடர்பில், மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்றார்.

“நீங்கள் என்னை ஜனாதிபதியாக்கி, 14 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் பல மாதங்கள் மிஞ்சி இருக்கின்றன. மீண்டும் நான் இந்தப் பதவியில் அமர மாட்டேன் என்று பலர் பரவலாகப் பேசுகின்றனர். யார் என்ன கூறினாலும், மக்களே என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். இனியும் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அது எல்லாவற்றுக்கும் முன்னர், இப்போது கொடுக்கப்பட்டுள்ள 60 மாதங்களுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும்.

“எப்போதும், நகரத்துக்கே எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்க முடியாது. பெரும்பாலான மக்கள், கிராமங்களிலேயே வாழ்கிறார்கள். இங்கிருந்து தான், நெல், மரக்கறி என அனைத்தும் வருகின்றன. அதனால், கிராமங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .