2026 மே 06, புதன்கிழமை

மீன் வாங்க பேலியகொட செல்லலாம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட பேலியகொட மீன் சந்தையை மீள திறக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மொத்த விற்பனை செயற்பாடுகளுக்காக மாத்திரம் நாளை (14) முதல்  மீன் சந்தையை திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய மொத்த விற்பனையில் ஈடுபடும் 154 வியாபாரிகளை கட்டம் கட்டமாக வியாபார நடவடிக்கையில் ஈடுபட  அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி, பேலியகொட மீன் சந்தையை மூட நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .