2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மீற்றர் பொருத்தாத ஓட்டோ சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர் அளவீட்டு கருவிகளின் தரம் குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை பெற்றுகொண்டதன் பின்னர், குறித்த கருவியை ஓட்டோக்களில் பொருத்தாது ஓட்டோக்களை செலுத்தும் சாரதிகளை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, ஓட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர் அளவீட்டு கருவிகள் அடுத்த இரண்டு வாரங்களில் பரிசோத​னைக்குட்படுத்தபடுமெனவும், மேலும் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மீற்றர் அளவீட்டு கருவிகளுக்கான அறிக்கையானது, அதனுடன் தொடர்புடைய அமைச்சருக்கு வழங்கப்பட்டு, குறித்த அந்த அறிக்கைக்கமைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட ​மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .