R.Maheshwary / 2020 நவம்பர் 11 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சகல உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் சுயதனிமைபடுத்தப்பட்ட வீடுகளிலும் அகற்றப்படும் முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற பிரத்தியேக வாகனம் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள், கையுறைகளை மஞ்சள் நிற பையில் இட்டு வேறுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மஞ்சள் நிற பைகளில் இடப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை எக்காரணம் கொண்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பொதுமக்கள் அணியம் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை கழிவுத் தொட்டியில் இடுவதற்கு முன்னர், நன்றாக கழுவி, காயவைத்த பின்னர் அகற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago