Editorial / 2021 மார்ச் 10 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா. நிரோஸ்
முகங்களை மூட வேண்டுமா, மூடக்கூடாதா என்பதை எல்லாம் முஸ்லிம் பெண்களே தீர்மானிக்க வேண்டுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், முஸ்லிம் திருமணச் சட்டங்களை இஸ்லாமிய புத்திஜீவிகள், அறிஞர்களுடன் கலந்துரையாடாது மாற்றமுடியாது என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காகப் பெண்கள் செல்லும்போது, அவர்களது குடும்பங்கள் சீரழிவதைக் காணக்கிடைப்பதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான நிலைமைகளால், வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காகப் பெண்களை எதிர்காலங்களில் அனுப்புவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
பெண்கள், தங்கள் முகங்களை மூடுவதால்,நாட்டுக்குப் பாரிய ஆபத்து எனப் பலர் தெரிவிக்கின்றனர். ஆனால், பெண்கள் தாங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை, அவர்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆடை அணிந்துதான் செல்கிறார்களா? அல்லது, ஆடையில்லாது செல்கிறார்களா எனப் பார்க்குமளவுக்குச் சில பெண்களின் ஆடைகள் அமைந்திருக்கும் என்றார்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாது, இஸ்லாமியர்களை மாத்திரம் பழிவாங்கும் நோக்கில், அவர்களது ஆடைகள் தொடர்பில் போலியான பிரசாரங்களைச் செய்துவருவதாகவும் தெரிவித்த அவர், இஸ்லாமிய திருமணச் சட்டங்களை, அரசாங்கத்தினரோ, அமைச்சர் ஒருவரோ மாற்றிவிட முடியாது. அத்துடன், இரவோடு இரவாகவும் மாற்ற முடியாது என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago